News Just In

12/10/2023 08:16:00 PM

அஷ்-ஷுஹதா பாடசாலையும் மழை காலங்களில் அவர்களின் துயரமும்!




NFGG Media 

மேற்படி விடயமானது, சகோதரர் ராசிதீன் அவர்களினால் NFGGயின் பிராந்திய தலைமைத்துவசபையின்கவனத்திற்குகடந்தவாரம்கொண்டுவரப்பட்டிருந்தது. இது தொடர்பாக சபை விரிவாக ஆராய்ந்தது. அதனை தொடர்ந்து Eng.அப்துல் ரஹ்மான் அவர்களும் சகோதர்களான ராசிதீன், பர்சாத் மற்றும் ஷெரீப் உள்ளிட்ட குழுவினர் அந்த இடத்துக்கு சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டனர். பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களும் அக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

தோணா-வடிகாலுக்கு முன்பாக அமைந்துள்ள இந்த பாடசாலை
மழை காலங்களின் போது ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்படுகிறது.பாடசாலையின் வெளிப்புறம் மாத்திரமன்றி, பாடசாலை அதிபரின் அலுவலகம் உட்பட வகுப்பறைகளில் கூட வெள்ளம் நிறைந்து விடுகிறது என்றும் அதனால் அன்றாடம் தாம் படும் துயரங்கள் எவ்வாறானது என்பது பற்றியும் பாடசாலை அதிபரும் ஆசிரியரும் விபரித்தனர்.அதேபோன்று பாடசாலைக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மழைக்காலங்களில் தாம் அனுபவிக்கும் துயரங்கள் பற்றியும் விவரித்தனர்.

இவற்றுக்கான தொழில்நுட்ப ரீதியான முதல் கட்ட தீர்வு எவ்வாறு அமைய முடியும் என்பதனை Eng.அப்துர் ரஹ்மான் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
இதனை இப்பாடசாலைக்கும், இப்பிரதேச மக்களுமுக்கான ஆரம்பகட்ட தீர்வாக எவ்வாறு அமுல்படுத்தலாம் என்பது பற்றியும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


No comments: