18% ஆக VAT வரி விதிக்கப்பட்டதன் பின்னர் ஒரு லீற்றர் டீசலின் விலை 63 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.
ஒரு லீற்றர் டீசல் தற்போது 346 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும், ஜனவரி முதல் 63 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சின் மீதான குழுநிலை வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் VATக்கு உட்படுத்தப்படும் என்றார்.
கடற்றொழில் துறை ஏற்கனவே சீர்குலைந்துள்ளதாகவும், 18 வீத VAT வரியை அமுல்படுத்துவது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments: