நூருல் ஹுதா உமர்
கல்முனை வலய மாணவர் பாராளுமன்றம் அமர்வு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தலைமையில் (29.11.2023) சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் கல்முனை வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த முதல் அமர்வில் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இடையில் தேர்தல் முறையில் தெரிவு செய்யப்பட்ட மாணவ பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் விளக்கிய இந்த முதல் அமர்வில் வலய கல்விப் பணிமனை அதிகாரிகளும், பாடசாலைகளின் பொறுப்பு ஆசிரியர்களும் கலந்து கொண்டதோடு கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹிதுல் நஜீம் கல்முனை வலய மாணவர் பாராளுமன்றத்தின் செயலராகவும் தலைமை வகித்து கொண்டார்.
இந்நிகழ்விற்கு தலைமை வகித்த கல்முனை வலய கல்விப் பணிப்பாளரின் விளக்க உரையை தொடர்ந்து மாணவ பாரளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும், மாணவ பாரளுமன்ற சபாநாயகரின் உரையும், மாணவ பாரளுமன்ற 10 அமைச்சர்களின் உரையும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments: