News Just In

11/05/2023 08:11:00 AM

இலங்கையில் நடைமுறைப்படுத்தவுள்ள மற்றுமொரு வரி!

இலங்கையில் காணிக்கு வரி விதிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காகஇந்த வரி விதிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள நிலத்தின் மதிப்பை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப பல வகைகளின் கீழ் இந்த வரியை வசூலிக்க திட்டமிட்டுள்ளது.

எனினும், இந்த வரியை வசூலிக்கும் முறை குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

No comments: