News Just In

11/24/2023 07:56:00 AM

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் குழந்தைகள் - உண்மையை அம்பலப்படுத்திய வெளிநாட்டு பெண்!

இலங்கையிலுள்ள குழந்தைகளை வெளிநாட்டு மக்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்கும் கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் இது தொடர்பான அறிக்கைகளை வழங்கியுள்ளது.

இந்த பாரிய மனித கடத்தலை மேற்கொள்ளும் கும்பல் கண்டி பிரதேசத்தில் இருந்து செயற்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் பிரிவினர் நீதிமன்றில் சாட்சிகள் முன்வைத்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட நோர்வே பெண்ணான கே.பிரியங்கிகா சாமந்தி என்பவரே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முன்வைக்கப்பட்ட தகவல்களை கருத்திற்கொண்ட நீதிமன்றம், சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments: