
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (28) மாலை செங்கலடி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய இளைஞனே இவ்வாறு கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காணாமல் போன மாணவனை கண்டுபிடிக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments: