யுத்தநிறுத்த விடயத்தில் 14 வருடங்களிற்கு முன்னர் ஈழத்தமிழர் விடயத்தில் செயற்பட்டது போல ஐநாவும் மேற்குலகமும் செயற்படுகின்றன என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
காசாவில் இன்று இடம்பெறுவது இலங்கை தமிழர் மோதல் தொடர்பில் வரலாறுமீண்டும் நிகழ்வதாகும் என தெரிவித்துள்ள அவர் யுத்தநிறுத்த விடயத்தில் ஐக்கியநாடுகள் மேற்குலகம் மற்றும் ஏனைய சக்தி வாய்ந்த நாடுகள் நீதி மற்றும் சமாதான பொறிமுறைகள் 14 வருடத்திற்கு முன்னர் ஈழத்தமிழர் விடயத்தில் செய்தது போல காசா மக்கள் விடயத்தில் தோல்வியடைகின்றன அவர்களை கைவிடுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2012ம் ஆண்டின் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பான ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் உள்ளக ஆய்வறிக்கை இலங்கையில் மோதல் இடம்பெற்ற பகுதிகளில் இடம்பெறும் பேரழிவை சில ஐநா அதிகாரிகள் மறைத்தனர் என தெரிவித்துள்ளதுஎனவும் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்
2008 இல் இலங்கையில் இடம்பெற்ற சார்க்மாநாட்டிற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்தத்தை அறிவித்தனர் என தெரிவித்துள்ள அவர் சமாதான பேச்சுவார்த்தைகளில் அனுசரணையாளர்களாக செயற்பட்டவர்களும் சர்வதேசசக்திகளும் பரஸ்பர போர்நிறுத்த முயற்சியை உரிய விதத்தில் உள்வாங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
No comments: