
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி இன்று (04) அல்லது நாளை (05) அறிவிக்கப்படவுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதை,உத்தியோகபூர்வமாக வெளியிடும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் உதயண கிரிந்திகொட நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான தீர்மானம் எதுவும் அறிவிக்கப்பட இல்லை. இதனால், மாணவர்கள் பாதிப்படைவதாக சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பில் உரிய தரப்புடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கையை அமைச்சர் எடுக்க வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, மாணவர்கள் பாதிக்கும் வகையில் இதுவரை எதுவும் நடந்து விடவில்லை. மேற்படி பரீட்சையை நடத்தும் திகதியாக ஏற்கனவே நாம் நவம்பர் 27 ஐ, குறிப்பிட்டிருந்தோம். எவ்வாறாயினும் இந்த திகதியை முன்னுக்கு நகர்த்தாமல் பிற்போட வேண்டிய நிலையே வரும்.இன்றோ அல்லது நாளையோ இது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும்.
No comments: