
சர்வதேச சைகை மொழித் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட வைபவமும் விழிப்புணர்வு நடைபவனியும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டப வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
“செவிப்புலனற்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் சைகை மொழியை பயன்படுத்தக் கூடிய உலகம்” என்பது இந்த ஆண்டின் சர்வதேச சைகை மொழித் தினத்தின் தொனிப்பொருளாகும்.
மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்திலிருந்து மட்டக்களப்பு திருமலை வீதி வரை சென்ற நடைபவனியில் இலங்கை தமிழர் செவிப்புலன் வலுவற்றோர் அமைப்பின் தலைவர் திரு.வள்ளிகாந்தன் உட்பட 500ற்கும் மேற்பட்ட செவிப்புலனற்றோர் கலந்துகொண்டனர்.
No comments: