News Just In

10/23/2023 05:15:00 PM

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு!



2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை கணனி மயமாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
14 மில்லியன் பதிவுகள் கணினிமயமாக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2022/23 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இவ்வருடம் மே 29 முதல் ஜூன் 08 வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: