அனைத்து அரச சேவையாளர்களும் நாளை (30) பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வு கோரி நாடு முழுவதும் இவ்வாறு வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச சேவையாளர்களும் நாளைய தினம் வீதிக்கு இறங்குவதற்கு தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments: