கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற அகிலா கனகசூரியம் அவர்களை பாராட்டி பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மேற்குவலயக்கல்வி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் யோகேந்திரா ஜெயச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், ஓய்வு பெற்றுச் சென்ற மாகாண கல்விப் பணிப்பாளரைப்பற்றியபாராட்டு உரைகள், கவிதைகள், பாடல்கள் இடம பெற்றதுடன் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் அமீர் மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளால் ஓய்வு பெற்ற மாகாண கல்விப்பணிப்பாளர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வில் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், கணக்காளர்ஈ கல்வித்திணைக்கள அதிகாரிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments: