News Just In

10/04/2023 10:19:00 AM

நீர் கட்டணத்திற்கு இலத்திரனியல் பட்டியல்!

 நீர் கட்டணத்திற்கு இலத்திரனியல் பட்டியல்!

பொருளாதார நெருக்கடியின் காரணமாக, கட்டணப் பட்டியல்களை அச்சிடுவதற்கான செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இலத்திரனியல் கட்டணப் பட்டியல்களை இம்மாதம் முதல் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, வாடிக்கையாளர்கள் தமது கட்டணப் பட்டியல் இலக்கத்தை 071 93 99999 எனும் இலக்கத்திற்கு அனுப்பி இலத்திரனியல் கட்டணப் பட்டியல்களுக்காக பதிவு செய்துகொள்ள முடியும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

தொலைபேசி இலக்கத்தை மாற்றுவதற்கு மீண்டும் குறித்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

No comments: