News Just In

10/09/2023 07:40:00 PM

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தால் ‘குடும்பத்திற்கு ஒரு பசு வழங்கல்’ வேலைத்திட்டம்!

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தால் ‘குடும்பத்திற்கு ஒரு பசு வழங்கல்’ வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.!





மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம், வறுமை நிலையில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த
புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபை நேர்த்திக் கடனாக கிடைக்கப் பெற்ற பசுக்களை,வறுமையான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ‘குடும்பத்திற்கு ஒரு பசு வழங்கல்’ வேலைத்திட்டம் ஊடாகவழங்க முன்வந்துள்ளது.

முதற்கட்டமாக போரதீவுப்பற்று, மண்முனை மேற்கு, ஏறாவூர்ப் பற்று, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து பிரதேச செயலாளர்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்டதலா இரண்டு குடும்பங்கள் வீதம் ஆறு குடும்பங்களுக்கு பசுக்கள் வழங்கப்பட்டன.ஆலய பரிபாலன சபைத் தலைவர் வண்ணக்கர் இ.மேகராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வின்போதே பசுக்கள் வழங்கப்பட்டன.

No comments: