News Just In

10/09/2023 07:36:00 PM

வடக்கு - கிழக்கில் 20 ஆம் திகதி கதவடைப்பு போராட்டம்!


வடக்கு - கிழக்கில் 20 ஆம் திகதி கதவடைப்பு போராட்டம்: தமிழ்த் தேசிய கட்சிகள் தீர்மானம்! 


எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு - கிழக்கு மாகணங்களில் கதவடைப்பு போராட்டம் நடத்துவதற்குத் தமிழ்த் தேசிய கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளன.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தைக் கண்டித்தும், நீதி கோரியும் கதவடைப்பு போராட்டம் தொடர்பான கூட்டம் யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இன்று (09.10.2023) மாலை நடைபெற்றது.

அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்ளுக்கும் இடையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலிலேயே, எதிர்வரும் 20 ஆம் திகதி கதவடைப்பு போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளதாக ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறீகீந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும், ரெலோ சார்பில் முன்னாள் தவிசாளர் நிரோஷ் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.


No comments: