(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 1980களில் கற்றவர்கள் சுமார் 45 ஆண்டுகள் கழிந்த நிலையில் முதன்முறையாக மட்டக்களப்பு காத்தான்குடியில் ஞாயிறன்று 18.10.2026 ஒன்று கூடல் நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர்.
இந்த அபூர்வமான நிகழ்வின் ஏற்பாட்டாளரும், ஓய்வுபெற்ற அதிபரும், மொழிபெயர்ப்பாளருமான, சமூகவியலாளர் எம்.பி.எம். முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தற்சமயம் சுமார் 70 வயதுகளிலிருக்கும் கல்வியியலாளர்களான ஓய்வு நிலையிலுள்ள சுமார் 30 இற்கு மேற்பட்டோர் ஒன்று கூடி தமது கடந்தகால ஆசிரியர் கலாசாலையின் கற்றல், கற்பித்தல் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய ஒன்றுகூடல் சந்திப்பின் ஒருங்கிணைப்பாளர் முஸ்தபா, சுமார் 45 வருடங்கள் கழிந்த நிலையில் இவ்வாறான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதற்காக கடந்த 2 வருடங்களாக முயற்சி தொடங்கப்பட்டது. அது இப்பொழுது கைகூடி இருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. 1982, 1983களில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கற்ற ஆசிரிய மாணவர்கள் 129 பேரில் தற்சமயம் 45 பேர் நம்மோடு இல்லை. அவர்கள் மரணித்து விட்டார்கள். இன்றைய சந்திப்பில் சிலர் உருவம் மாறிய நிலையில் தங்களது கலாசாலைத் தோழர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. நாட்டில் வெகு தொலைவில் வசிக்கின்றவர்கள்கூட தள்ளாடும் வயதில் இந்த சந்திப்புக்காக வந்திருப்பது வியப்பூட்டுவதாய் இருக்கிறது. நண்பர்களாகிய நாம் நாட்டில் எப்பாகத்தில் இருந்தாலும் இனி எஞ்சியுள்ள நமது வாழ்க்கைக் காலத்தை பரஸ்பர நட்புறவோடு கழிப்போம்” என்றார்.
நிகழ்வில் தங்களோடு ஒன்றாக இருந்து தற்போது இறையடி சேர்ந்துள்ள தங்களது கலாசாலை அதிபர், விரிவுரையாளர்கள், சக நண்பர்கள் ஆகியோருக்காக துவா பிரார்த்தனை செய்யப்பட்டது.
அத்துடன் அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றன. பகல் போஷனத்திற்குப் பின்னர் ஒன்று கூடல் நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் நினைவுக் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வின் நிறைவில் மேற்படி ஓய்வு நிலைக் கல்வியாளர்கள் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்கும் தமது நினைவுப் பயணத்தை மேற்கொண்டனர்

No comments: