அரசகட்டமைப்பிற்குள் சிங்கள பௌத்த ஆதிக்கம் ! பேர்ள்அமைப்பு
தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் நடத்திய விதத்திற்கும் பௌத்தமதகுருவை நடத்திய விதத்திற்கும் இடையிலான வித்தியாசம் அரசகட்டமைப்பிற்குள் ஆழமாக வேருன்றியுள்ள சிங்கள பௌத்த ஆதிக்கவாதத்திற்கான தெளிவான உதாரணம் என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்தி;ற்கான மக்கள் அமைப்பு பேர்ள் தெரிவித்துள்ளது
வார இறுதியில் வெளியான வீடியோக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை துன்புறுத்துவது ஈவிரக்கமற்ற விதத்தில் தாக்குவதை காண்பித்தன என பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.
நில ஆக்கிரமிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்கள் குறித்து மட்டக்களப்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றன.
இதேவேளை மட்டக்களப்பில் பௌத்தமதகுரு அம்பிட்டிய சுமணரத்தின ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் வீடியோவும்; வெளியாகியிருந்தது.
மதகுரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் வீடியோவில் பொலிஸார் அமைதியாக குழப்பமடையாமல் காணப்படுகின்றனர்.
தமிழர்களிற்கு எதிரான பொலிஸாரின் ஈவிரக்கமற்ற தாக்குதல்கள் குறிப்பாக வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு எதிரான தாக்குதல்கள் பல வருடங்களாக தொடர்கின்றன எனவும் பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் நடத்திய விதத்திற்கும் பௌத்தமதகுருவை நடத்திய விதத்திற்கும் இடையிலான வித்தியாசம் அரசகட்டமைப்பிற்குள் ஆழமாக வேருன்றியுள்ள சிங்கள பௌத்த ஆதிக்கவாதத்திற்கான தெளிவான உதாரணம் எனவும் பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்திற்கான தங்கள் உரிமையை பயன்படுத்துவதில் பல தடைகளை எதிர்கொண்டுள்ளனர் - பிரதானமாக பொலிஸாரிடமிருந்து என தெரிவித்துள்ள பேர்ள் அமைப்பு குருந்தூர் மலையில் சட்டவிரோத பௌத்த கட்டுமானத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் தடுக்க முயன்றமை சமீபத்தைய உதாரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்மக்களின் கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியாக ஓன்றுகூடல் ஆகியவற்றினை இலங்கை தொடர்ந்தும் ஒடுக்குவதற்கு எதிராக சர்வதேச சமூகம் குரல்கொடுக்கவெண்டும் எனவும் பேர்ள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments: