News Just In

10/23/2023 12:34:00 PM

இராணுவத்தினரால் கிழக்கு மாகாணத்தில் வறுமை கர்ப்பிணித் தாய்மாருக்கு போசாக்கு உணவுப்பொதிகள் வழங்கப்படுகிறது




(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)

இராணுவத்தினரால் கிழக்கு மாகாணத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் கர்ப்பிணித் தாய்மாருக்கு போசாக்கு உணவுப்பொதி கள் வழங்கும் விசேட திட்டமொன்று தற்பொழுது அமுல் நடத்தப் பட்டு வருகிறது

கிழக்கு மாகாண இராணுவ தளபதி மெஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்தினவின் யோசனைக் அமைய இந்த விசேடதிட்டம் சர்வ மத அமைதிக்கான அமைப்பின் அனுசரணையுடன் இந்தத் திட்டம் அமுல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கொக்கட்டி சோலை வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கர்ப்பிணி தாய்மார் நூறு பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான போசாக்குணவு அடங்கிய பகுதி உலர் உண வுப் பொதிகள் கொக்கட்டி சோலை கலாச்சார மண்டபத்தில் நடை பெற்ற விசேட வைபவத்தில் வைத்து வழங்கி வைக்கப் பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ தளபதி மேஜர் ஜென ரல் பிரசன்ன குணரத்த அமைதிக்கான சர்வ மத குழுவின் பொதுச் செயலாளர் இலங்கை மெதடிஸ்த சபையின்தலைவர். எவனேசர் ஜோசப் அடிகள், 24 ஆவது படைப்பிரிவின் அதிகாரி மேஜை ஜென்ரல் விபுல சந்திர ஸ்ரீ 143 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரிபிரி கேடியர் பிரேமரத்ன த கொக்கொட்டி ச்சோலை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகே. ரமேஷ் மத குருமார்கள் பிரதேச பொது நல அமைப்பின் பிரதிநிதிகள் பொது மக்கள் அடங்கலாக பலரும் இங்கு சமூகம் அளித்திருந்தனர்.


No comments: