News Just In

10/20/2023 08:09:00 AM

22 வயதான மட்டு. பல்கலைக்கழக மாணவியின் விபரீத முடிவு!

மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் 2ஆம் வருடத்தில் பயிலும் 22 வயதான மாணவியே உயிரை மாய்த்துள்ளார்.. உயிரிழந்த மாணவி மட்டக்களப்பு பழுகாமம் பகுதியை பூர்விகமாகக் கொண்டவர் என கூறப்படுகின்றது.

மாணவியின் குடும்பம் கண்டியில் வசித்து வந்த நிலையில் , பல்கலைக்கழக கல்வியை நொச்சிமுனையிலுள்ள சித்தியின் வீட்டில் தங்கியிருந்து படிப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையிலையே இந்த விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: