News Just In

9/08/2023 02:56:00 PM

கணிதப் பிரிவில் சிறந்த சித்திபெற்ற மாணவன் மாரடைப்பால் திடீர் மரணம் !





கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் (2022ஆம் கல்வியாண்டு) அடிப்படையில் கணிதப்பிரிவில் சிறந்த சித்தியைப் பெற்ற மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சோகமான சம்பவமொன்று வல்லவ பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

வல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோராய ரணவன பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஆர்.ஜி.மனுஜய ஹன்ஸ்மல் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (7) இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவன் இரண்டாவது முறையாக கணிதப் பிரிவில் உயர்தர பரீட்சையில் தோற்றியிருந்ததோடு, அதில் மூன்று  A   சித்திகளுடன் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.

அவர் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மக்கள் வங்கியின் குருநாகல் மல்லவப்பிட்டிய கிளையில் தற்காலிகமாக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: