News Just In

9/04/2023 11:56:00 AM

கொழும்பில் மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியை சேர்ந்தபல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு !




மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாணவன் கொழும்பு – ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்ற முதலாம் ஆண்டு மாணவராவர்.

சம்பத்தினமான கடந்த 31.08.2023 அன்று குறித்த மாணவன் காணாமல் போன நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொலைபேசி மூலம் அவரை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர்.

சந்தேகமடைந்த உறவினர்கள்
எனினும் அவரது தொலைபேசி செயற்பட்டதாகவும் எவ்வித மறு அழைப்பும் உறவினருக்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகமடைந்த உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிரித்த பொலிஸார் , மாணவன் சென்ற இடங்கள் தொடர்பான சிசிரீவி காணொளியை ஆராய்ந்துள்ளனர்.

அதன்படி மாணவன், கொழும்பில் உள்ள தனியார் விடுதியொன்றின் அறையை முன்பதிவுசெய்துள்ளமை தெரியவந்துள்ளது. இவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும், உயிரிழந்த மாணவனின் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை உயிரிழந்த மாணவன் கல்குடா வலயத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்று, கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்ததாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

No comments: