News Just In

9/19/2023 11:41:00 AM

சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.!






சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியின் வேப்பஅடி வளைவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் இளம் மகளும் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடதுபுறத்தில் உள்ள வேப்ப மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வேனின் சாரதி, அவரது மகள் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாரதியும், மகளும் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த மனைவி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 54 வயதுடையவர் எனவும் உயிரிழந்த சிறுமி காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 04 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்

No comments: