News Just In

8/16/2023 11:25:00 AM

பிரதமராக வரவில்லை ஓர் இந்துவாக வந்துள்ளளேன்! பிரித்தானிய பிரதமர்





இந்து மத நம்பிக்கை, தன்னை மிகச்சிறந்த பிரதமராக செயற்பட வழிகாட்டுவதாக, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஆன்மீக தலைவரான மொராரி பாபு (Morari Bapu) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடத்திய ராம கதை உபன்யாசத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த உரையில் ”இந்திய சுதந்திர தினத்தன்று ராம கதை நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெருமையாகக் கருதுகிறேன். நான் இங்கு பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்” எனவும் பிரதமர் ரிஷி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ராமாயணம், பகவத் கீதை மற்றும் அனுமான் சாலிசா ஆகியவற்றை நினைவு கூர்ந்த பிரதமர் ரிஷி சுனக் தனது உரையை ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் ஜெய் ஸ்ரீராம் எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: