முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழா ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் உரிமைகளை வென்றெடுக்க அணிதிரளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் குருந்தூர்மலை ஆதிசிவன்ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும் அரசியல் தலைவர்கள் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி இந்த அழைப்பை விடுத்துள்ளனர்
இந்த விடயமானது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், தொல்லியல் திணைக்களம் சைவ வழிபாடுகளை மேற்கொள்தற்கு எந்தத் தடையுமில்லை எனத் தெரிவித்திருந்தது.
அதற்கமைய இந்த பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அனைவரையும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்
No comments: