News Just In

8/24/2023 04:58:00 PM

சீன கப்பல் இலங்கை வருவதற்கு முன்னர் இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!




அடுத்த மாதம் இலங்கை வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், திருகோணமலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் பெட்ரோலியப் பொருட்களை மாற்றுவதற்காக இரு நாடுகளையும் இணைக்கும் குழாய் திட்டத்தை அமைக்கும் இறுதி நோக்கத்துடன் இந்தியா முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் திகதி ராஜ்நாத் சிங் இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதுதவிர சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 கப்பல் வருவதற்கு முன்னதாகவே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் வருகை திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தியா ஏற்கனவே கவலை தெரிவித்துள்ள நிலையில் சீனக் கப்பலின் வருகைக்கு இலங்கை இன்னும் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments: