மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்ற பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை பார்வையிட்டு அவற்றை கேட்டறிவதற்காக களவிஜயம் மேற்கொண்டு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலினை முன்னெடுத்தனர்.
இதன் பிற்பாடு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து மீண்டும் திரும்பிச் செல்லும்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை பிடிப்பவர்கள் மற்றும் பௌத்த மதகுரு ஒருவரும் இனைந்து அனைவரையும் வரும் வழியில் மறித்து சிறைபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments: