கல்கிஸை - காங்கேசன்துறை குளிரூட்டப்பட்ட சொகுசு ரயிலான யாழ் நிலாவின் முதல் பயணம் இன்று ஆரம்பம்!
கல்கிஸை - காங்கேசன்துறைக்கு இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் இன்று (4) இரவு 10 மணிக்கு கல்கிஸை ரயில் நிலையத்திலிருந்து முதல் முறையாக பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
'யாழ் நிலா' என பெயரிடப்பட்டுள்ள இந்த குளிரூட்டப்பட்ட ரயில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு 10 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டை மற்றும் கல்கிஸையை வந்தடையும்.
யாழ் நிலா சுற்றுலா ரயிலில் பயணம் செய்வதற்கு முதல் வகுப்பு கட்டணமாக 4,000 ரூபாயும் இரண்டாம் வகுப்பு கட்டணமாக 3,000 ரூபாயும் மூன்றாம் வகுப்பு கட்டணமாக 2,000 ரூபாயும் அறவிடப்படும்.
இந்த குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் தினமும் இயக்கப்படும் என்று திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: