News Just In

8/15/2023 03:47:00 PM

விமானப்படைத் தளங்களை தகர்த்தெறிந்த விடுதலைப் புலிகளுக்கு இதை செய்திருக்க முடியாதா..! கஜேந்திரன் காட்டம்



கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மற்றும் அநுராதபுரம் விமானப்படைத் தளம் என்பவற்றுக்குள் புகுந்து தகர்த்தெறிந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வடக்கு, கிழக்கில் இருக்கும் பௌத்த அடையாளங்களை தகர்த்தெறிவது என்பது மிகவும் சாதாரணமான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆனால் விடுதலைப் புலிகளிடம் அப்படியொரு கொள்கை ஒருபோதும் இருந்தது கிடையாது, தமிழர்களிடமும் அப்படியொரு கொள்கை இருந்தது கிடையாது எனவும் அவர் ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.

தான் வடக்கு, கிழக்கிற்கு செல்வதாகவும், அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவதாகவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் கூறிய விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

No comments: