அத்தியாவசிய மருந்து வகைகளை பெறுவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி 161 அத்தியாவசிய மருந்து வகைகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் அவை நாட்டிற்குக் கிடைக்கும் என சுகாதாரதுறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தற்போது 850 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளாகப் பெயரிடப்பட்டுள்ளன.
அவற்றில் 260 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் அவற்றையும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனச் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
No comments: