News Just In

8/18/2023 12:25:00 PM

யாழில் 56 வயதான பெண்மணி ஒருவர் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்தார் !


யாழில் 56 வயதான பெண்மணி ஒருவர் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் - வடமராட்சி, வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்றைய தினம் (17-08-2023) இடம்பெற்றது.

இதில் பெண்களுக்கான ஒரு கடல் மைல் நீச்சல்ப் போட்டி இடம்பெற்றது.

குறித்த போட்டியில், 4 பிள்ளைகளைக் கொண்ட 40 வயது பெண்மணி முதல் இடத்தையும், 3 பிள்ளைகள், 2 பேரப்பிள்ளைகளைக் கொண்ட 44 வயது பெண்மணி இரண்டாம் இடத்தையும், 4 பேரப்பிள்ளைகள், 6 பிள்ளைகளைக் கொண்ட 56 வயதான பெண்மணி மூன்றாம் இடத்தையும் சாதனை படைத்துள்ளனர்.

இதன்போதே ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து குறித்த வயோதிப பெண்மணிகள் நீத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான நீச்சல், படகோட்டப் போட்டிகள் இடம்பெற்றன.

ஆயினும் பெண்களுக்கான நீச்சல் போட்டியில் வயோதிப மாதுக்களின் நீச்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நீச்சல் போட்டியானது, பருத்தித்துறை - தென்னியம்மன் முனையில் இருந்து இன்பசிட்டி வரை இடம்பெற்றது.

No comments: