News Just In

7/24/2023 07:39:00 AM

இன்றைய தினம் பல ரயில் சேவைகள் ரத்து: வெளியான முக்கிய அறிவித்தல்!

புகையிரத ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக இன்று திங்கட்கிழமை (ஜூலை 24) காலை பல வழித்தடங்களில் 12 அலுவலக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று காலை கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில்கள் உட்பட பல பாதைகளில் சேவையில் ஈடுபடவிருந்த 12 புகையிரதங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

என்ஜின் சாரதிகளின் பணிப் பட்டியலுக்கு எதிராகவே தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments: