இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 647,085 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான எழுச்சி ஏற்பட்டுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,450 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 159,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அதிர்ந்து போயுள்ளது.
ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.
புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.
தங்க அலகு தங்க விலை
ஒரு தங்கம் அவுன்ஸ் ரூ. 647,085.00
24 கரட் 1 கிராம் ரூ. 22,830.00
24 கரட் 8 கிராம் ரூ. 182,650.00
22 கரட் 1 கிராம் ரூ. 20,930.00
22 கரட் 8 கிராம் ரூ. 167,450.00
21 கரட் 1 கிராம் ரூ. 19,980.00
21 கரட் 8 கிராம் ரூ. 159,850.00
செட்டியார் தெரு விலை விபரம்
செட்டியார்தெரு நிலவரத்தின்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1,900 ரூபா அதிகரித்து 158,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 171,000 ரூபாவாக காணப்படுகிறது.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை பதிவாகிய விலைகளின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 159,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், நேற்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 156,300 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments: