உலகளாவிய ரீதியில் அண்மைக் காலமாக விவாகரத்து பெறுவோர் தொகை அதிகரித்து வருவதை காணலாம். விவாகரத்து நடைமுறைகளை மேற்கொள்வோர் பலர் மன ரீதியிலான அழுத்தங்கள், சிக்கல்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகும்.
இந்த அழுத்தங்களில் இருந்து மீண்டு வரவும், சிக்கல்களை எதிர்கொள்ளவும், விவாகரத்துக்கான பலன்களை வழங்க முன்வந்துள்ளன சில நிறுவனங்கள்.
விவாகரத்து நடைமுறைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு தேவையான ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது, சட்ட நடைமுறைகளுக்கு ஏற்றவாறு அலுவலக நேரத்தை மாற்றிக் கொள்வது போன்ற பலன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சில நிறுவனங்கள் மனநல ஆலோசனை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளன. பிரியலாம் என முடிவெடுக்கும் தம்பதிகள், தங்களது பிள்ளைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்களையும் இந்த நிறுவனங்கள் வழங்குகின்றன என்பது ஆச்சரிய தகவல்.
விவாகரத்து பெறுவதற்கான நடைமுறைகளின்போதும், விவாகரத்துக்கு பிறகும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகும் பணியாளர்கள், தங்களது பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் போவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சூழல் நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டே, விவாகரத்து கால விடுப்பு என்ற முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளன சில நிறுவனங்கள். தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பெரு நிறுவனங்கள் இந்த விவாகரத்து பலன்களை அறிவித்துள்ளன.
No comments: