News Just In

6/08/2023 07:59:00 AM

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பரீட்சை கண்காணிப்பாளராக கடமையாற்றிய நிலையில் திடீரென உயிரிழப்பு!

வத்தேகம மகளிர் பாடசாலையின் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் கண்காணிப்பாளராக கடமையாற்றிய பாடசாலை ஆசிரியை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் பரீட்சை ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் திடீரென சுகவீனமடைந்து வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரான 48 வயதுடைய கே. ஜே. சில்வா என்பவரே உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஆசிரியர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

No comments: