News Just In

6/08/2023 09:54:00 AM

மட்டகளப்பு கல்முனை பிரதான வீதியில் விபத்து!




-- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடத்தில் புதன்கிழமை மாலை (07.06.2023) இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் கழுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது கட்டுநாயக்காவில் இருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அதே திசையில் முன்னே சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியதனால் இவ்விபத்து  நிகழ்ந்தது .


இதில்  மட்டக்களப்பில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கழுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தின் முன் பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


No comments: