News Just In

6/07/2023 07:18:00 PM

காதலுக்கு பெற்றார் எதிரிப்பு தெரிவித்ததால் தனது உயிரை மாய்த்த உயர்தர மாணவி!

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி, பெரியகல்லாறு பிரதேசத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன் தினம் (05) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் சிவகுரு வீதி பெரியகல்லாறு பிரதேசத்தை சேர்ந்த சுதர்சன் யோஜிதா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.

உயிரிழந்த மாணவி உயர்தர வகுப்பில் கல்வி கற்று வரும் நிலையில் அப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர்களின் காதலுக்கு பெற்றார் எதிரிப்பு தெரிவித்து வந்தனர்.

சம்ப தினத்தன்று உறவினர் ஒருவரின் திருமண வீட்டுக்கு செல்ல இருந்த நிலையில் மாணவி தனது வீட்டின் அறையினுள் சென்று தனக்குத்தானே தூக்கிட்டுள்ளார். மாணவி தூக்கில் தொங்குவதை கண்ட தந்தை பதறிப்போய் மாணவியை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார்.

விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காதலால் மாணவி உயிரை மாய்த்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments: