
-- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையிலுள்ள கதிரவெளி தாமரை வில்லுக்குளத்திலிருந்து பிளாஸ்ரிக், பொலித்தீன் மற்றும் இன்ன பிற உக்காத திண்மக் கழிவுகளை அகற்றுவதில் பிரதேச பொதுமக்கள் ஈடுபட்டனர்.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்டமிடலில் வாகரைப் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
உலக சுற்றுச் சூழல் தினத்தை அனுசரிக்கும் முகமாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் நீர் நிலைகள் அமைந்துள்ள பிரதேசங்களில் இந்த தூய்மையாக்கல் விழிப்புணர்வு தொடர் நிகழ்வு புதன்கிழமை 07.06.2023 இடம்பெற்றது.
வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கதிரவெளி தாமரை வில்லுக்குளத்தில் ஆட்களால் அசிரத்தையாக வீச்பட்ட பிளாஸ்ரிக் உட்பட பொலித்தீன்கள், இன்னும் பிற உக்காத பொருட்களையும் திண்மக் கழிவுகளையும் அகற்றுவதில் பிரதேச பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சூழல் பாதுகாப்பு தூய்மைப் படுத்தல் வேலைத்திட்டத்திற்கு வீஎபெக்ற் (றுந நுககநஉவ) நிறுவனம் நிதி அனுசரணை வழங்குகின்றது.
சிரமதானப் பணிகளில் பிரதேச செயலக சுற்றாடல் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். பானுபிரியா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். சத்தியகாந்தினி இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர்களான ஏ.சஞ்சித்குமார், எஸ். நவீன் உட்பட பிரதேச பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
No comments: