News Just In

5/01/2023 08:16:00 AM

அதிரடியாக எரிபொருள் விலைகளை குறைத்த லங்கா IOC நிறுவனம்!

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலைகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறைந்துள்ளது.

இந்நிலையில் லங்கா IOC நிறுவனமும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் விலைக்களை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள புதிய எரிபொருள் விலைகளின் கீழ் தாமும் விற்பனை செய்யவுள்ளதாக லங்கா IOC நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 340 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 333 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

அத்துடன்,95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 375 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 365 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

அதேபோல் ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 310 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 465 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 330 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

எனினும், மண்ணெண்ணெய் விலையில் மாற்றங்கள் எதுவும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments: