News Just In

5/09/2023 10:39:00 AM

சமூகக் கலந்துரையாடல்களை உருவாக்கும் நோக்கில் சமூக ஊடக பயனர்களுக்கு செயலமர்வு!




-- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நாடளாவிய ரீதியில் சமூக கலந்துரையாடல்களை உருவாக்கும் நோக்கில் ஊடகவியலாளர்களுக்கும் சமூக ஊடக பயனர்களுக்கும் சிங்கள தமிழ் மொழி மூலமான செயலமர்வுகள் இடம்பெற்று வருவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளரும் சட்டத்தரணியுமான லயனல் குருகே தெரிவித்தார்.

இதனடிப்படையில் நாடாளாவிய ரீதியில் ஏற்கெனெவே தெரிவு செய்யப்பட்டுப் பயிற்சியளிக்கப்பட்ட சிங்களம் மற்றும்; தமிழ் மொழிமூலமான சுமார் 130 சமூக ஊடகப் பயனர்களுக்கு மாவட்ட அளவிலான சமூக ஊடக ஒன்றியத்தினை உருவாக்குவதற்கான பயிற்சி செயலமர்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை 05.05.2023 தொடக்கம் ஹபறணையில் இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பான பயிற்சிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய சட்டத்தரணி லயனல் குருகே, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அரசாட்சி மற்றும் மோதல் தீர்வு அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துகிறது. சிறந்த அரசியல் கலாசாரம் மற்றும் விழுமியம் மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்புதலுக்காக பொதுமக்களுடன் சம்பந்தப்படுகின்ற கொள்கைகளை விமர்சன ரீதியாக புலனாய்வு செய்கின்ற மாற்றுத் தெரிவுகளை இனங்கண்டு அவற்றை விஸ்தரிக்கும் ஆய்வு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க நாம் காத்திரமாக செயற்பட்டு வருகிறோம்.

அதனடிப்படையில் விளக்கமுடைய ஆற்றுப்படுத்தல், அழுத்தம் தெரிவித்தலை வலுப்படுத்துதல் மற்றும் நாட்டில் சகவாழ்வு மேம்பாட்டுக்கான சிவில் வாய்ப்பை உருவாக்குவதற்காக” மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் செயல்படுத்தும் ஒரு செயற்திட்டத்தின் இரண்டாவது படிமுறையாக மாவட்ட அளவிலான சமூக ஊடக ஒன்றியம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பான செயலமர்வு இடம்பெற்று வருகின்றது.

இச்செயலமர்வின்போது இடம்பெறுகின்ற "மாவட்ட அளவிலான சமூக ஊடக ஒன்றியத்தினை” உருவாக்கும் திட்டமானது” நாட்டு மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளை கண்டறிந்து அவை தொடர்பாக சமூக கலந்துரையாடல்களை உருவாக்குதல் தொடர்பானதாகும். இச் செயற்பாட்டுடன் தொடர்புடைய வகையிலான தொழிநுட்ப ரீதியான பயிற்சிகள் இச் செயலமர்வின்போது வழங்கப்பட்டு வருகின்றது.

ஒருங்கிணைந்த ஊடகப் பயிற்சிகளோடு யூ ரீயூப், முகநூல் உள்ளிட்ட ஏனைய ஒலி, ஒளி உள்ளிட்ட ஏனைய அச்சு இலத்திரனியல் ஊடகங்களையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துவது காணெளிகளைப் பதிவிடுவது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.


No comments: