News Just In

5/04/2023 11:15:00 AM

கல்முனை அல்-மிஸ்பாவில் வாய் சுகாதார விழிப்பணர்வு நிகழ்வுகள்




நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக கடந்த புதன்கிழமை (03) பிராந்திய வாய் சுகாதாரப் பிரிவினால் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட கல்முனை கல்வி வலய கமு/கமு/அல்-மிஸ்பா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான வாய் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

சர்வதேச வாய்ச்சுகாதர தினத்தையொட்டி தொடர்ந்தேர்ச்சியாக பிராந்திய வாய் சுகாதார நிபுணர் வைத்தியர் எம்.எச்.கே சரூக் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற நிகழ்வுகளில் ஒரு அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, கமு/கமு/ அல்-மிஸ்பா வித்தியாலய பிரதியதிபர், சுகாதார உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கமு/கமு அல்-மிஸ்பாஹ் மாணவர்களினால் வாய்ச் சுகாதாரம் தொடர்பான நிகழ்வுகளும் இதன் போது முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது


No comments: