News Just In

5/10/2023 07:48:00 AM

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் தலைமறைவு - தீவிர தேடுதலில் காவல்துறை!

களுத்துறையில் 16 மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய தனியார் ஆசிரியர் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

கணிதம் கற்பிக்கும் குறித்த ஆசிரியர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சந்தேகத்திற்குரிய ஆசிரியரைக் கண்டுபிடிப்பதற்காக களுத்துறைப் பிரதேசத்தின் பல காவல் நிலையங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த மாணவிகளை வகுப்பறையில் வைத்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் செய்ததுடன், சிறுமிகளை வீட்டில் இறக்கி விடுவதாக தெரிவித்து களுத்துறை லாகோஸ்வத்த பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு தனது காரில் அழைத்துச் சென்று காரில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது தெரியவந்துள்ளது.

இதேவேளை, அவற்றை தனது கைத்தொலைபேசியிலும் அவர் பதிவு செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேகநபர் சிறுமிகளுக்கு ஜூம் தொழில்நுட்பம் மூலம் வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும், பெற்றோர் இல்லாத போது சிறுமிகளை ஆடைகளை கழற்றுமாறு அறிவுறுத்தி காட்சிகளை பதிவு செய்துள்ளதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான முதல் தகவல் சம்பந்தப்பட்ட சந்தேக நபரின் மனைவிக்கு தெரியவந்தது. சந்தேகமடைந்த மனைவி அனைத்து பாலியல் வீடியோக்களையும் கணவர் தனது மடிக்கணயியில் வைத்திருந்ததை கண்டுபிடித்தார். பின்னர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோரிடம் தெரிவித்தார். அதன் பின்னரே இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் களுத்துறை பிரதேச காவல் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: