News Just In

4/25/2023 02:09:00 PM

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு குறித்து எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு





பண்டிகை காலத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனை தொடர்ந்து கடந்த வாரமும் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை மாற்றமின்றி தொடர தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.

அத்துடன் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்ட நாட்களில் பதிவாகும் நுகர்வு உள்ளிட்ட புள்ளிவிபரங்களை ஆராய்ந்த பின்னரே அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்படுமா என்பது தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எட்டப்படும் எனவும் கடந்த வாரம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும், முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 5 லீட்டரில் இருந்து 8 லீட்டராகவும், மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 4 லீட்டரில் இருந்து 7 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

மேலும் பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 40 லீட்டரில் இருந்து 60 லீட்டராகவும், கார்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீட்டரில் இருந்து 30 லீட்டராகவும், லொறிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 லீட்டரிலிருந்து 75 லீட்டராகவும், வான்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீட்டரிலிருந்து 30 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments: