News Just In

4/12/2023 03:30:00 PM

நாம் என்றைக்கும் தமிழர், முஸ்லிம் என்று பிரித்து கதைத்துக் கொண்டு இருப்போமேயானால் ஒரு நாளும் நம்மிடையே சமாதானம் வரமாட்டாது




எஸ்.எம்.எம்.முர்ஷித்
நாட்டில் நாங்கள் ஒருவரும் பிரிந்து வாழ முடியாது. நாம் என்றைக்கும் தமிழர், முஸ்லிம் என்று பிரித்து கதைத்துக் கொண்டு இருப்போமேயானால் ஒரு நாளும் நம்மிடையே சமாதானம் வரமாட்டாது என்று அமைச்சரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் 2023ம் ஆண்டுக்கான முதலாவது பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் தலைமையில் இடம் பெற்ற போது உரையாற்றுகையிலயே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

மாவட்டத்தில் வறுமையை இல்லாமல் செய்து மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது அதன் அடிப்படையில் இலவசமாக அரிசி வழங்குகின்ற வேலைத்திட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் 90வீதம் வழங்கப்பட்டு விட்டது அதே போன்று வீட்டுத் தோட்ட வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது அதன் காரணமாக இந்தப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளின் விலைகள் குறைவாக காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது இதே போன்று ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பல்வேறு வேலைத்திட்டங்கள் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிநான்கு பிரதேச செயலகங்கள் உள்ளது அதில் 27 வீதமான முஸ்லீம்கள் இருக்கின்ற வேலையிலே முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பிரதேச செயலகங்கள் நான்கு உள்ளன அவர்களுக்கு 1.2 வீதமான காணிகள் மாத்திரம்தான் பிரதேச செயலகங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது அதே போன்று 126 கிலோ மீற்றர் கடல் எல்லை உள்ளது அதிகமான மீனவர்கள் கடல் தொழிலாளர்களாக இருந்தாலும் அவர்கள் வாழும் பிரதேசத்தில் கடல் எல்லை என்ற பாரிய குற்ற சாட்டும் கடற்தொழிலாளர்கள் மத்தியில் உள்ளது.

இதே போல் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 1200 குடும்பங்களுக்கு ஆறு பேர்ச் காணி கூட இல்லாத துக்ககரமான நிலையுள்ளது இந்த குறைபாடு நிவர்த்தி செய்யப்பட வேண்டும் காணி இல்லாமல் கஸ்டப்படுபவர்களுக்கு பெரியதொரு அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது பனம்பல ஆணைக்குழுவின் தீர்மானங்கள் தவறாக அமுல்படுத்தப்பட்டு இன்றும் அது நியாயப்படுத்தப்பட்டு இருக்கின்ற ஒரு தோரனை கண்டிக்கப்பட வேண்டி ஒரு விடயமாகும் என்றும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் வீ.தவராஜா, உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன், பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கணக்காளர் அஹமட் சஜ்ஜாத், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், ஓட்டமாவடி கோட்ட கல்வி அதிகாரி வீ.ரீ.அஜ்மீர், அமைச்சரின் இணைப்பாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


No comments: