News Just In

4/02/2023 01:37:00 PM

மருதமுனை அல்- ஹிக்மாவில், தரம் - 01 ஆங்கில மொழி தேசிய வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு!

கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய ஆங்கில மொழியை தரம் - 01 இல் இருந்து கற்பிக்கும் தேசிய வேலை திட்டம் தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயத்தில் தரம் - 01 இல் இருந்து ஆங்கில மொழியை கற்பிக்கும் தேசிய வேலை திட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான மாதிரி பாடசாலையாக தெரிவு செய்யப்பட்ட மருதமுனை கமு/கமு/அல்-ஹிக்மா ஜூனியர் பாடசாலையில் தரம் - 01 மாணவர்களுக்கான ஆங்கில மொழி கற்பித்தல் செயற்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம். மஹ்றூப் தலைமையில் வியாழக்கிழமை (30) பாடசாலையில் நடைபெற்றது.

கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்வி பணிப்பாளருமான ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தரம் - 01 ல் புதிதாக இணைந்து கொண்ட மாணவர்களை கிரீடம் அணிவித்து வரவேற்றதுடன் ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாட்டினை ஆரம்பித்து வைத்தார்.

இந்த வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாட்டினை முன்னெடுத்தனர்.

இந்த நிகழ்வில் கல்முனை கல்வி வலய ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் வை.ஏ. கே தாஸிம், ஆரம்ப கல்வி வளவாளர் எம்.எம்.ஏ.கபீழ், ஓய்வு பெற்ற அதிபர் ஏ.ஆர்.ஏ.றாஸிக் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சங்க செயலாளர் பி.எம் அறபாத் உட்பட அபிவிருத்தி நிறைவேற்று சங்க உறுப்பினர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(நூருள் ஹுதா உமர், ஏ.எல்.எம்.ஷினாஸ்)







No comments: