News Just In

3/08/2023 11:23:00 AM

இலங்கை தொடர்பாக IMF தலைவர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!




இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கான திட்டத்தினை எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர்களிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

அதன்படி தீர்க்கமான கொள்கைமுடிவுகளை எடுத்து இந்தியா சீனா பாரிஸ் கிளப் உட்பட முக்கிய கடன் வழங்குநர்களின் நிதி உத்தரவாதத்தை பெற்றதன் மூலம் இந்த விடயத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கைகளை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மார்ச் 20ஆம் திகதி இலங்கை தொடர்பான திட்டத்தை நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: