கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலய சர்வதேச மகளிர் தின விழா பாடசாலை அதிபர் யூ. எல். நஸார் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று (08) இடம்பெற்றது.
சர்வதேச ரீதியில் பெண்களின் சாதனைகள், இஸ்லாம் மார்க்கம் உட்பட ஏனைய மதங்கள் பெண்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகள், மனித வாழ்வில் பெண்களின் வகிபாகம், சர்வதேச மகளிர் தின உருவாக்க வரலாறு பற்றிய உரைகளை பாடசாலை அதிபர், ஆசிரியைகள் நிகழ்த்தினர்.
பெண்கள் போராடி பெற்ற உரிமைகள் தொடர்பிலும், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய சிறப்புக்கள் தொடர்பிலும் இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர் ஜிகானா ஆலிப் சிறப்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்தும் மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டிய அவசியம் தொடர்பிலும், சமூகம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகள், கடமைகள் தொடர்பிலும், இஸ்லாமிய பார்வையில் பெண்கள் சமத்துவம் தொடர்பிலும் கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச். றியாஸா உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியும், கல்முனை வலய உதவிக்கல்வி பணிப்பாளருமான ஏ.பி.எப். நஸ்மியா சனூஸ், கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளர் அஸ்மா மலிக் உட்பட பாடசாலை பிரதி, உதவி அதிபர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
மகளிர் தின சிறப்பு நிகழ்வுகளை ஒட்டிதாக பாடசாலை ஆசிரியைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன் ஆசிரியைகளுக்கு நினைவுசின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நூருள் ஹுதா உமர்
No comments: