News Just In

3/07/2023 03:47:00 PM

அலுவலக ஊழியர்களின் நன்மை கருதி இராணுவ வீதிச் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டது.




(அபு அலா)
நிந்தவூர் இளைஞர் தன்னார்வ அணியின் வேண்டுகோளின் பிரகாரம், நிந்தவூர் பிரதான வீதியிலும், அக்கரைப்பற்று அம்பாறை பிரதான வீதியிலும் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியினை, வாரநாட்களில் காலை 6.00 மணி தொடக்கம் 9.00 மணி வரை அகற்றுவதற்கு இராணுவத்தின் 24 ஆம் காலாட் படைப்பிரிவின் கட்டளைக் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்த்ரசிரி அனுமதி வழங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் (06) காலை, மல்வத்தையில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் 24 ஆம் காலாட் படைப்பிரிவின் இராணுவ முகாமில் நடைபெற்ற சினேகபூர்வ சந்திப்பின்போதே கட்டளைக் தளபதியினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த பிரதான வீதியின் ஊடாக அதிகமான உத்தியோகத்தர்கள் காலை வேளையில் அலுவலகங்களுக்குச் செல்வதினால், பல்வேறு அசௌகரியங்களைச் சந்தித்து வருவதுடன், இந்த சோதனைச் சாவடியில் தரித்து நிற்கும் நேரம் அலுவலக கடமை நேர தாமத கைவிரல் அடையாளப் பதிவு செய்ய வேண்டிய அசௌகரியமான நிலைமைக்கு ஆளாகி வருகின்றனர். இந்த விடயம் பற்றி நிந்தவூர் இளைஞர் தன்னார்வ அணியின் செயற்பாட்டாளர்களான ஊடகவியலாளர் சுலைமான் றாபி மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர் சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண ஆளுநரின் ஆயுர்வேத துறைக்கான இணைப்பாளருமான சுலைமான் நாசிறூன் ஆகியோர், இலங்கை இராணுவத்தின் 24 ஆம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்த்ரசிறியின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, குறித்த வீதிகளிலுள்ள இராணுவ வீதிச் சோதனைச் சாவடிகளை அகற்ற அனுமதி வழங்கப்பட்டு இன்று அவைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், இலங்கை இராணுவ 18வது விஜயபாகு காலாட்படையணி கட்டளை அதிகாரி மேஜர். உதித்த கலுஆராச்சி மற்றும் இலங்கை இராணுவ 241வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேர்ணல் பதிரத்ன ஆகியோரின் வழிநடாத்தலுடன், நேற்று (07) காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை குறிப்பிட்ட பிரதேசங்களில் அமையப்பெற்றுள்ள இந்த சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டிருந்ததுடன், வார நாட்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரைக்கும் குறித்த இராணுவ சோதனைச் சாவடியை அகற்றுவதற்கு இராணுவத்தின் 24ம் காலாட் படைப்பிரிவின் கட்டளைக் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்த்ரசிரி அனுமதி வழங்கியுள்ளார்.


No comments: