
- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு நீதி நிருவாக பிரிவுக்கான தமிழ் மொழி மூல பிரசித்த நொத்தாரிசாக ஏறாவூரைச் சேர்ந்த மொஹமட் ஷரீப் மொஹமட் ரூமி புதன்கிழமை 01.03.2023 மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
விஞ்ஞானப் பட்டதாரியாகவும் தொழில் நுட்பக் கல்லூரி சிவில் பொறியியல்துறை கற்கையையும் முடித்துள்ள இவர் தற்சயமயம் தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களத்தின் புள்ளி விவர உத்தியோகத்தராகக் கடமையாற்றுவதோடு ஏறாவூர் நகர சபையின் அனுமதியளிக்கப்பட்ட பட வரைஞராகவும் ஏறாவூர் மத்தியஸ்த சபையின் மத்தியஸ்த குழாம் உறுப்பினராகவும் பணிபுரிகின்றார்.
No comments: