News Just In

3/01/2023 06:42:00 AM

இன்று வானத்தைப் பார்க்க மறக்காதீர்கள்! சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் நிகழவுள்ள அதிசயம்!





வானில் சில அதிசய நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்வதுண்டு.
அந்தவகையில் இன்றைய தினம்(01.03.2023) சூரிய அஸ்தமனமான ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மேற்கு வானத்தில் ஒரு அதிசய நிகழ்வு நிகழும் என நாசா தெரிவித்துள்ளது.

சந்திரன், வெள்ளி, வியாழன் ஆகிய மூன்று கோள்களும் முக்கோண வடிவில் வானில் தென்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வானில் அவ்வப்போது கோள்கள் பூமிக்கு அருகே வருவது, வால் நட்சத்திரம், கோள்கள் ஒன்றிணைவது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுகின்றன, அவற்றில் சிலவற்றை மட்டுமே நம்மால் வெறும் கண்களால் பார்க்க இயலும். அவ்வாறான ஒரு நிகழ்வாகவே இது கருதப்படுகின்றது.

வியாழன் மற்றும் வெள்ளி நமது சூரிய மண்டலத்தில் உள்ள இரண்டு பிரகாசமான கிரகங்களாகும். இந்த இரண்டும் சில நாட்களாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
எப்படி இது நிகழ்கின்றது...?

கடந்த மாத தொடக்கத்தில், இரண்டு கிரகங்களும் 29 டிகிரியால் பிரிக்கப்பட்டன, இப்போது அவை மெதுவாக ஒருவருக்கொருவர் நெருங்கி வருகின்றன.

இவைகளோடு சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் இன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வளிமண்டலத்தில் சந்திக்கும் என்பதால் இரவு வானில் ஒரு அரிய நிகழ்வைக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: