News Just In

3/09/2023 03:22:00 PM

தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் 11 வது சர்வதேச ஆய்வரங்கு!!




நூருள் ஹுதா உமர்
“பொருளாதார நெருக்கடி மூலமான சவால்களை வணிக புத்தாக்கத்தினூடாக எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலான சர்வதேச ஆய்வு மாநாடு, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீட கேட்போர் கூடத்திலும் நிகழ்நிலை (Online) ஊடாகவும் பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சித்தி சபீனா கஸ்ஸாலி தலைமையில் எமரழ்ட் (Emerald) வெளியீட்டகத்தினுடன் இணைந்து கடந்த 07.03.2023 அன்று இடம்பெற்றது.

ஆய்வு குழுவின் ஒருங்கிணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சல்பியா உம்மாவின் ஒருங்கிணைக்ப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டு உரையாற்றினார். ஆய்வரங்கின் பிரதம பேச்சாளராக ஆஸ்த்ரேலியாவின், La Trobe பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Vanessa Ratten (Prof Vanessa Ratten - Professor of Entrepreneurship, Department of Management, La Trobe Business School, La Trobe University, Melbourne, Australia.) கலந்து கொண்டு பிரதான உரையை ஆற்றினார்.

விஷேட உரையை ஐக்கிய இராச்சியத்தின் Essex பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Teerooven Soobaroyen (Prof Teerooven Soobaroyen - Professor in Accounting, Department of Accounting, University of Essex, United Kingdom) மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்.ஜயந்த தேவசிறி (Prof N Jayantha Dewasiri – Professor in Finance, Department of Accountancy and Finance, Sabaragamuwa University of Sri Lanka) ஆகியோர் நிகழ்த்தினர்.

இவ் ஆய்வு மாநாட்டில் ஆஸ்த்ரேலியா, ஐக்கிய இராச்சியம், மலேசியா, இந்தியா, பஹ்ரைன், பாகிஸ்தான் மற்றும் இலங்கை பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பொருளாதார நெருக்கடி மூலமான சவால்களை எதிர்கொள்ளக் கூடிய 50 சிறந்த ஆய்வு கட்டுரைகளையும் சமர்ப்பித்திருந்தனர்.

தலைமை உரையை வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சித்தி சபீனா கஸ்ஸாலி ஆற்றிய அதேவேளை, வரவேற்புரையை (Coordinator AiRC 2022) எம்.ஏ.சி.சல்பியா உம்மாவும் அதிதிகள் அறிமுக உரையை மாநாட்டின் பொருளாளர் விரிவுரையாளர் எம். சிறாஜி மற்றும் நன்றியுரையை ஆய்வு மாநாட்டின் செயலாளர் விரிவுரையாளர் எம்.பர்விஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.

நிகழ்வின்போது முகாமைத்துவ பீட துறைத்தலைவர்கள், தலைமை பேராசிரியர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் சர்வதேச ரீதியில் கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களும் அதிதிகளும் நேரடியாகவும் நிகழ்நிலை (Online) ஊடாகவும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments: